கார்த்திகேயா நடிப்பை பார்த்துவிட்டு அஜித் சொன்ன விஷயம்!
நடிகர் அஜித் நடிப்பில் வலிமை படம் அடுத்த வாரம், பிப்ரவரி 24 வியாழக்கிழமை, வெளியாகிறது. இந்த படம் மீது பெரிய எதிர்பார்ப்பை அஜித் ரசிகர்கள் வைத்திருக்கின்றனர்.
அஜித்துக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்து இருக்கிறார். அது பற்றி அவர் அளித்து இருக்கும் பேட்டியில் தான் அஜித், ஹெச்.வினோத் இடமிருந்து அதிகம் நடிக்க கற்றுக்கொள்ளலாம் என நினைத்து தான் ஷூட்டிங் சென்றேன் ஆனால் அவர்கள் என் நடிப்பை பற்றி எதுவுமே சொல்லவில்லை என கூறி இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் ‘என் நடிப்பு எப்படி இருக்கிறது’ என கேட்டேவிட்டாராம். அதற்க்கு வினோத் ‘எனக்கு அதிகம் நடிக்க வராது. ஒரு மீட்டர் வைத்திருப்பேன், அதற்குள் உங்கள் நடிப்பு இருக்கிறதா என்று மட்டும் தான் மானிட்டரில் பார்ப்பேன்’ என கூறி இருக்கிறார்.
மேலும் அஜித் ‘நன்றாக நடிக்கிறாய். இப்படியே தொடர்ந்து நடி’ என தெரிவித்து இருக்கிறார்.