மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் சிக்கினார்.

நுவரெலியா, பொகவந்தலாவைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொராவத்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவரைப் பொகவந்தலாவைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பொகவந்தலாவைப் பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயது நபரே நேற்று இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது மாணிக்கக்கல் அகழ்வுக்காகப் பயன்படுத்திய பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.