விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்திற்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரி.

முன்னாள் ஜனாதிபதியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் யாழ்ப்பாணம் இல்லத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தில் அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் பங்கேற்றிருந்தார். இதன்போது உணவு விருந்திலும் மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட மாநாடு இடம்பெற்றிருந்த நிலையில். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் பலரும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.