உக்ரைனிலுள்ள இந்தியர்களை மீட்க கிளம்பியது முதல் விமானம்!
உக்ரைனில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இந்தியர்களை மீட்பதற்காக முதல் விமானம் உக்ரைனுக்கு புறப்பட்டுச் சென்றது.
ஐரோப்பிய நாடான உக்ரைனின் எல்லையில் ரஷியா 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரா்களைக் குவித்துள்ளதால், அங்கு போா்ப் பதற்றம் நிலவுகிறது. இதன் காரணமாக உக்ரைனில் உள்ள இந்தியா்கள் தாயகம் திரும்ப முயற்சிக்கின்றனா். ஆனால், போதிய விமான சேவை இல்லாததால், அவா்கள் உக்ரைனில் தவிப்பதாக செய்திகள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து ஏர் இந்தியா சார்பில் மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்பதற்காக மூன்று விமானங்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்கும் முதல் ஏர் இந்தியாவின் விமானம் இன்று காலை உக்ரைன் நாட்டிற்கு கிளம்பிச் சென்றது. 200 இருக்கைகளை கொண்ட இந்த விமானம் இன்று நள்ளிரவில் தில்லி வந்தடையவுள்ளது.
தொடர்ந்து, பிப்ரவரி 24 மற்றும் 26 ஆம் தேதிகளில் அடுத்தடுத்த விமானங்களை ஏர் இந்தியா நிர்வாகம் இயக்கவுள்ளது.