பயன்படுத்திய கார்களை கொள்வனவு செய்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்.
இலங்கையில் கார்களுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் பயன்படுத்திய கார்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் மக்கள் சரியான தகவல்களின்றி அதிக விலை கொடுத்து பயனற்ற கார்களை கொள்வனவு செய்வதாக தெரியவந்துள்ளளது. இதனால் ஏற்கனவே பயன்படுத்திய கார்களை கொள்வனவு செய்பவர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் தனது அனுபவத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
“இது என தனிப்பட்ட அனுபவம். Toyota Vitz 2016 ரக கார் ஒன்றை நான் 2019ஆம் ஆண்டு கொள்வனவு செய்தேன்.
நான் கொள்வனவு செய்யும் போது 78560 மைலேஜ் ஓடிய நிலையில் பெற்றுக்கொண்டேன். நான் ஒரு வருடம் பயன்படுத்தி விட்டு 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 44 லட்சம் ரூபாய்க்கு அதனை விற்பனை செய்தேன். நான் விற்பனை செய்யும் 109000 மைலேஜ் ஓடியிருந்தது. தற்போது அந்த கார் 70 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது.
அந்த கார் தற்போது நல்ல திறனில் இல்லை. எனினும் புதிய அறிக்கைகள் மூலம் குறைந்த அளவு தூரம் ஓட்டியதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும் எப்படி அதனை தயாரிக்க முடிந்ததென தெரியவில்லை. இதனால் வாகனம் கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருங்கள்” என அவர் பதிவிட்டுள்ளார்.