ரயில்களில் வானொலி பொழுதுபோக்குகள் விரைவில் அறிமுகம்: வடக்கு ரயில்வே திட்டம்

விரைவில் சதாப்தி, வந்தே பாரத் ரயில்களில் வானொலி பொழுதுபோக்குகளை விரைவில் தொடங்க வடக்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டப்பட்டுள்ள அறிவிப்பில், சதாப்தி மற்றும் வந்தே பாரத் ரயில்கள் பயணிகளுக்கு ஒரு வானொலி பொழுதுபோக்கு பயணத்தை வழங்க தயாராக உள்ளன, ரயில்வே பயணிகளின் முகவரி அமைப்பு மூலம் ரயில்களில் பயணிப்பவர்களுக்கு இசை மற்றும் ஆர்ஜே பொழுதுபோக்கு உள்ளிட்ட வானொலி முழு பொழுதுபோக்குகளை அறிமுகப்படுத்த வடக்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் ரயில் பயணிகள் தங்கள் பயணத்தின் போது வானொலி வசதிகளை விரைவில் அனுபவிக்க முடியும்.
இந்த சேவையை தில்லி பிரிவில் இருந்து இயக்கப்படும் சதாப்தி மற்றும் வந்தே பாரத் ரயில்களில் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வடக்கு ரயில்வே அளித்துள்ளது. இந்த வானொலி பொழுதுபோக்கு சேவை மூலம் பயணிகள் அவர்கள் பயணிக்கும் நகரங்களைப் பற்றிய தகவல்களை பெறமுடியும்.
முதலில், பத்து சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களிலும், இரண்டு வந்தே பாரத் ரயில்களில் வானொலி மூலம் பொழுபோக்கு, ரயில்வே தகவல் மற்றும் வணிக விளம்பரங்கள் விளம்பரம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.
தற்போது தில்லி, லக்னௌ, போபால், சண்டிகர், அமிர்தசரஸ், அஜ்மீர், டேராடூன், கான்பூர், வாரணாசி, கத்ரா மற்றும் கத்கோடம் வழியாக பயணிக்கும்போது இந்த வானொலி சேவையை அளிக்க திட்டமிட்டுள்ளது.
பயணிகளின் நல்ல பயணத்தை நோக்கமாகக் கொண்டு, ரயில்வே இந்த முடிவை எடுத்துள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.