டீசல் பற்றாக்குறையால் ரயில் சேவைகள் பாதிக்கப்படாது.

டீசல் தட்டுப்பாடு ரயில் சேவையில் பாதிப்பை ஏற்படுத்தாது என ரயில்வேயின் பிரதி பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
ரயில்வே திணைக்களத்திடம் போதிய டீசல் கையிருப்பு உள்ளது என்றும் திணைக்களம் எதிர்காலத்துக்கென பாரிய எரிபொருள் இருப்பு வைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.