3 படகுகளில் இருந்து 400 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!
கடற்படையினரின் உதவியுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மட்டக்குளியில் கேரள கஞ்சா தொகை ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.இதன்போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மூன்று படகுகளும் விசேட அதிரடிப்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் தொகை 400 கிலோ கிராம்களை அண்மித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
குறித்த கேரள கஞ்சா தொகை 185 பொட்டலங்களாக பொதியிடப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
கேரள கஞ்சா தொகை வெளிநாடு ஒன்றில் இருந்து நீர்கொழும்புக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் மட்டக்குளிக்கு படகு மூலம் கடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் போதைப் பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.