யுக்ரேன் தலைநகரின் ராணுவ தலைமையகத்தில் தாக்குதல்.
இதுவரை ரஷ்ய ராணுவ நடவடிக்கையின் விவரங்களை யுக்ரேன் அரசாங்க அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று காலை கீவ்வில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களும் நாட்டின் தெற்கே உள்ள ஒடெஸ்ஸாவில் படைகளின் நகர்வும் இருப்பதாக அந்த அதிகாரி கூறுகிறார்.
ரஷ்ய எல்லையிலிருந்து சுமார் 25 மைல் தொலைவில் உள்ள கார்கிவ் என்ற இடத்தில் துருப்புகள் எல்லையைக் கடந்து வருவதாகவும் அந்த அதிகாரி கூறுகிறார்.
யுக்ரேன் பதற்றம்
Getty ImagesCopyright: Getty Images
சாட்சிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் கூற்றுப்படி, இது மிகப்பெரிய அளவிலான ஒன்று,” என வாட்டர்ஹவுஸ் கூறுகிறார்.
சில ஏவுகணை தாக்குதல்கள் யுக்ரேனின் ராணுவ ஏவுகணை கட்டளை மையங்கள் மற்றும் கீவ்வில் உள்ள ராணுவ தலைமையகத்தைத் தாக்கியதாக யுக்ரேனின் உள்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் பல செய்திகளை வெளியிடுகின்றன.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் யுக்ரேனிய நகரங்களைத் தாக்குவதை மறுத்துள்ளது. அது ராணுவ உள்கட்டமைப்பு, வான் பாதுகாப்பு மற்றும் விமானப் படைகளை, “உயர் துல்லியமான ஆயுதங்களுடன்” குறி வைப்பதாகக் கூறியுள்ளது.