அஜித்தின் வலிமை முழு திரைவிமர்சனம்.
ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் ஆவலுடன் இரண்டு வருடங்களாக காத்திருந்த திரைப்படம்தான் வலிமை. ரசிகர்கள் பலரும் அஜித் ஆக்சன் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் அதனை காண வேண்டும் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா வலிமை என்பதை இங்கே காணலாம்.
வலிமை கதை- வலிமை படத்தின் கதை சென்னையில் ஒரு குழுவை சேர்ந்த இளைஞர்கள் வித விதமான பைக்குகளை வைத்துக் கொண்டு பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் அவர்கலின் அட்டூழியத்தை யாராலும் அடக்க முடியவில்லை. இவர்கள் போதைப்பொருள் கடத்தல் செயின் பறிப்பு கொலை குற்றங்கள் என இவர்களின் அட்டூழியம் அதிகரித்துக்கொண்டே போனது.
இவர்களின் அட்டூழியத்தை போலீசார் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதேபோல் அஜித் மதுரை மாநகரில் அசிஸ்டன்ட் கமிஷனர் அர்ஜுன் ஆக பணியாற்றி வருகிறார் இவர் தன்னுடைய குடும்பத்துடன் ஹாப்பி ஆக இருந்து வருகிறார். இங்குதான் கதை ஆரம்பிக்கிறது. அஜித் தம்பி மற்றும் அண்ணனின் நடவடிக்கை சரி இல்லாமல் போனதால் அஜித்து உடனடியாக சென்னைக்கு வருகிறார்.
அதேபோல் அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ள ஹீமா குரோஷி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக படங்களில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து அஜித் அவர்களும் ஒரு கொலை சம்மந்தப்பட்டதை விசாரிக்க ஆரம்பிக்கிறார். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. விசாரணையில் சென்னையில் நடக்கும் அனைத்துக் குற்றங்களும் அந்த குழுவை சேர்ந்த இளைஞர்களை வைத்து வில்லன் செய்து வருகிறார்கள் என கண்டறிகிறார் அஜித்.
அதேபோல் அந்தக் குழுவின் தலைவராக முகமே காட்டாத அளவிற்கு கார்த்திகேயா வில்லனாக பல வேலைகளை செய்து வருகிறார். ஒளிந்து கொண்டு பல வேலைகளை செய்து கொண்டிருக்கும் கார்த்திகாவை அஜித் அதிரடியாக அவரை பிடிக்கிறார். இதில் பெரிய கூத்து என்னவென்றால் அஜித்தின் தம்பி அந்த குழுவை சேர்ந்தவர் என்பது தெரியும் பொழுது படத்தின் கதையை மாறுகிறது.
உடனே தன்னுடைய அதிரடி நடவடிக்கையால் மறைந்து பல குற்றங்களை செய்து வந்த குழுவின் தலைவர் கார்த்திகேயவின் சதித்திட்டங்களை அஜித் எப்படி முறியடிக்கிறார் அதிலிருந்து எப்படி தன்னுடைய தம்பியை மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
படத்தில் அஜித் ஒன் மேன் ஆர்மியாக இறுதிவரை தாங்கி செல்கிறார் பரபரப்பாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் வினோத். இத்தனை நாள் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அஜித்தை திரையில் பார்க்கும் பொழுது அவரின் தோற்றம் மெய்சிலிர்க்க வைக்கிறது.
படத்தின் முக்கிய காட்சிகளில் நடித்துள்ளா ஹீமா குரோஷி மாஸ் காட்சிகளில் நடித்துள்ளது ரசிகர்களிடையே கைதட்டலை பெற்றுவிட்டார். அதேபோல் வில்லனாக நடித்து அசத்திய கார்த்திகேயா தமிழ் சினிமாவுக்கு புது வரவு என்றாலும் தனது நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். மேலும் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கனகச்சிதமாக நடித்திருந்தார்கள்.
படத்தின் முதல் பாதியில் சிட்டியில் நடக்கும் குற்றங்களை பதற வைக்கும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளார் வினோத். அவரின் ஸ்டைல் அப்படியே இந்த திரைப்படத்தில் தெரிகிறது படத்தின் முதல் பாதி டாப் கியர் போட்டு தூக்கி செல்கிறார் வினோத். அஜித்தை சுற்றியே கதை நகர்ந்து செல்கிறது இன்டர்வெல் வரை சீட்டியின் நுனியில் ரசிகர்களை அமர செய்கிறது. அந்த அளவு படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார்கள்.
அதேபோல் இரண்டாம்பாதி அஜீத் படத்திற்கே உரிய சென்டிமெண்ட் காட்சிகளுடன் முடித்துள்ளார்கள் சில இடங்களில் எமோஷன் காட்சிகள் பெரிதாக செட்டாகவில்லை என்றாலும் பஸ் சண்டை காட்சிகள் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல் என தெரிகிறது வினோத் அந்தக் காட்சிக்காக மெனக்கெட்டது வீணாகவில்லை அதேபோல் ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் அதகளம் பண்ணி விட்டார் ஒளிப்பதிவு நிரவ் ஷா சொல்லவே தேவையில்லை அவ்வளவு அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் முதல்பாதி ஹாலிவுட் ஸ்டைலில் சண்டை காட்சிகள் பட்டைய கிளப்பிவிட்டார்கள். இரண்டாம் பாதி சென்டிமெண்ட் காட்சிகள் மட்டும் சொதப்பலாகிவிட்டது. செட்டாகாது சென்டிமென்ட் காட்சி மொத்தத்தில் வலிமை ரசிகர்களுக்கு விருந்து.