யாழ். நெல்லியடியில் விபத்து! 18 வயது இளைஞன் உயிரிழப்பு!

நெல்லியடியில் இன்று மதியம் நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஹன்ரர் வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி இந்த விபத்து நடந்துள்ளது.
மதியம் 12.55 மணியளவில் நெல்லியடி மகளிர் கல்லூரிக்கு முன்பாக விபத்து நடந்துள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியின் மறுபக்கம் சென்று, எதிரே வந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது என்று சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்துத் தொடர்பாக நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்