ரூபவாஹினி சிங்களம் என்பதால் சிங்களத்தில் மட்டும் எழுதப்பட்டுள்ளது.

தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினி தொலைகாட்சி சின்னத்தில் இலங்கையின் அரச கரும மொழிகளில் தமிழ், ஆங்கிலம் அகற்றி சிங்களம் மட்டும் இணைக்கப்பட்டது தொடர்பில்…
ஊடகத்துறை அமைச்சரான டளஸ் அழகப்பெருமவிடம் வினவியபோது,
இலங்கையில் தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் சிங்களம் மட்டும் உபயோகிக்கப்படுவதால் சிங்களத்தை மட்டும் வைத்திருக்கின்றோம். தமிழ் மொழிக்கு தனி சேவைகள் வழங்கப்படுகின்றதால், ஆங்கிலம் மற்றும் தமிழை அகற்றியுள்ளோம்.தமிழுக்கான சேவையாக “நேத்ரா” உள்ளது.
உதாரணத்திற்கு தனியார் தொலைக்காட்சி சேவைகளை எடுத்துக்கொண்டால், ஆங்கில ஊடகங்களுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் உள்ளது. தமிழ் சேவைகளுக்கு தமிழில் மட்டுமே பெயர் கொடுக்கப்படுகின்றது. சிங்கள ஊடகங்களில் சிங்களத்தில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது.
அதைப்போன்றுதான் ரூபவாஹினி கூட்டுத்தாபனம் சிங்களம் என்பதால் சிங்களத்தில் மட்டும் எழுதப்பட்டுள்ளது.
இதில் எந்தவொரு பிரிவினைவாதமோ, மதவாதமோ, இனவாதமோ இல்லை என்று உறுதியாக தெரிவித்தார்.