இயக்குனர் பாலா தயாரிப்பில் ஆர். கே. சுரேஷின் வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள படம் விசித்திரன்.
இயக்குனர் பாலா தயாரிப்பில் ஆர். கே. சுரேஷின் வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள படம் விசித்திரன்.
இந்த படம் ஜோசப் என்ற மலையாள படத்தின் ரீமேக் ஆகும். மலையாளத்தில் இயக்கிய பத்மகுமாரே தமிழிலும் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நாயகிகளாக பூர்ணா மற்றும் அவன் இவன் பட புகழ் மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். பிப்ரவரி 22ல் இப்பட இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
விழாவில் நடிகை பூர்ணா பேசும்போது…
எனக்கு பாலா சார் படங்கள் பிடிக்கும். அவரின் இயக்கத்தில் நடிக்க ஆசை. அவரிடம் இந்த மேடையிலேயே வாய்ப்பு கேட்கிறேன். சார்.. ஒரு படத்திலாவது எனக்கு வாய்ப்பு தாருங்கள்” என பேசினார்.
விழாவில் ஆர்கே. சுரேஷ் பேசும்போது…
என் தந்தைக்கு பிறகு நான் மதிக்கும் மரியாதைக்குரிய நபர் என் அண்ணன் இயக்குனர் பாலாதான். அவர் தான் என்னை சினிமாவில் வழிநடத்தி வருகிறார். என் ரசிகர்களுக்கும் நன்றி என உருக்கமாக பேசினார்.
இறுதியாக பிரபல இயக்குனரும் விசித்திரன் படத்தின் தயாரிப்பாளருமான பாலா பேசியதாவது… நான் தயாரித்த படங்கள் எனக்கு பிடிக்கவில்லை என்றால் என் பெயரை படத்தில் போட வேண்டாம் என்று சொல்லிவிடுவேன்.
ஆனால் இந்த விசித்திரன் படம் எனக்கு பிடித்துள்ளது. எனவே என் பெயரை போட சொன்னேன்.
இந்த படத்தில் ஆர்கே. சுரேஷின் நடிப்புக்கு நல்ல மரியாதை கிடைக்கும். இதில் கிடைக்கும் மரியாதையை காப்பாத்திக்கோ.. மசாலா படங்களில் நடிக்காதே… ராமநாதபுரத்தில் இருந்து உனக்கு கூட்டம் சேர்க்க ஆள் கூட்டிட்டு வந்தீயா..?
பிஆர்ஓ நிகில் முருகன் சொல்ல சொன்னார்.. எனவே பிரஸ் மீடியாக்களுக்கு நன்றி..” என சுருக்கமாக பேசினார் பாலா.