உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஸ்ய விமானம்.

உக்ரைன் படையினரால் வெள்ளிக்கிழமை காலை தலைநகரில் சுட்டுவீழ்த்தப்பட்ட ரஸ்ய விமானம் கட்டிடமொன்றின் மீது விழுந்து நொருங்கியதில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
விமானம் குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை,ஏவுகணை தாக்குதலா இடம்பெற்றது என்பது குறித்த விபரங்களும் வெளியாகவில்லை.
விமானம் கட்டிடம் மீது விழுந்து நொருங்கியதன் காரணமாக 9 பேர் காயமடைந்துள்ளனர்.