உக்ரைனுக்கு நிதியுதவி வழங்க உலக வங்கி தயார் நிலையில்…
உக்ரைன் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த நிதியுதவி வழங்க உலக வங்கி தயாராக உள்ளதாக உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்ய-உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவுவதால், உக்ரைன் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. இராணுவ நெருக்கடிகளுக்கு மத்தியில் உக்ரைனுக்கு உடனடியாக நிதியுதவி வழங்க தயாராக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் ,கடந்த சனிக்கிழமையன்று உக்ரைன் நாட்டு ஜனாதிபதியை மல்பாஸ் சந்தித்து, உக்ரைன் மீதான உலக வங்கி குழுவின் வலுவான ஆதரவையும், அர்ப்பணிப்பையும் உறுதிப்படுத்தினார்.