திரவப் பால் கொள்வனவுகளில் காணப்படும் முரண்பாடுகளை தீர்க்க நடவடிக்கை.

திரவப் பால் கொள்வனவுகளில் காணப்படும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் கால்நடை, பண்ணை ஊக்குவிப்பு, பால் மற்றும் முட்டை கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் ஆகியோருக்குப் பணிப்புரை விடுத்தார்.
நாரஹேன்பிட்டியில் உள்ள Milco தொழிற்சாலையை இன்று (25) முற்பகல் பார்வையிட்ட போதே, ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
பால் பண்ணையாளர்களை மேம்படுத்துதல் மற்றும் திரவப் பால் பாவனையை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி அவர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.