உக்ரைனில் நிற்காது போலந்தையும் கைப்பற்ற ரசியா தயார்! செயற்கைக்கோள் புகைப்படங்கள் உறுதி!
உக்ரைன் மீதான படையெடுப்புக்குப் பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நிறுத்த மாட்டார் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
போலந்து எல்லைக்கு அருகே ரஷ்ய துருப்புக்கள் கனரக ஆயுதங்களை நிலைநிறுத்துவது போன்ற செயற்கைக்கோள் படங்கள் தனக்கு கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
போலந்து எல்லையில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள பெலாரஸின் பிரெஸ்டில் ரஷ்ய துருப்புக்களின் பெரும் குழு நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார்.
“உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்ய ஜனாதிபதி நிறுத்த மாட்டார் போல தெரிகிறது, உக்ரைன் ஆக்கிரமிப்புக்கு பிறகு அண்டை நாடான போலந்து, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி அல்லது ருமேனியாவில் சண்டையிடுவது நேட்டோ நாட்டின் மீது படையெடுப்பதற்குச் சமம். அப்படியானால், அது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா மற்றும் பிற நேட்டோ நாடுகளை பாதிக்கும். அப்படியானால், நேட்டோ அரசியலமைப்பின் பிரிவு 5 இன் படி முடிவு எடுக்கப்பட வேண்டும், ”என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஏபிசிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
பீரங்கி உட்பட கனரக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் கூடிய 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஏற்கனவே பெலாரஸின் ப்ரெஸ்டில் நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் அதிகமான வெடிமருந்துகள் ரயிலில் கொண்டு வரப்படுகின்றன என Foreign Policy Magazine பாதுகாப்பு நிருபர் ஜாக் டெட்ச் தெரிவித்தார்.