பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் 2வது நாளாக போராட்டம்!
சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள், இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இசை ஓவியம், தையற்கலை கற்பிக்கும் ஆசிரியர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், சென்னை, டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தினர். பணி நியமனம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்பது இவர்களின் கோரிக்கையாக உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் 2012ம் ஆண்டு 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு ஆசிரியர்கள் 5 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்களாக நியமணம் செய்யப்பட்டனர் .
கடந்த 10 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்கிற வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை உடனடியாக வருகின்ற சட்ட பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்ற வலியுறுத்தி பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் நேற்று முதல் டிபி ஐ வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.
பணி நியமனம் செய்யப்பட்டு தற்போது 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்குவதாக தெரிவித்துள்ள பகுதி நேர ஆசிரியர்கள் இந்த தொகையை வைத்து வாழ்வாதரம் நடத்த இயலவில்லை என்று தெரிவித்துள்ள அவர்கள் .
தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் சிறப்பாசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.