IOC பெற்றோல், டீசல் விலைகள் அதிகரிப்பு.

அனைத்து வகையான டீசலை லீற்றருக்கு 15 ரூபாயாலும், பெற்றோலை லீற்றருக்கு 20 ரூபாயாலும் நேற்று நள்ளிரவு முதல் லங்கா இந்தியன் ஒய்ல் நிறுவனம் உயர்த்தியுள்ளது.
அந்தவகையில், புதிய விலையின்படி 92 ஒக்டேன் பெற்றோலானது லீற்றருக்கு 204 ரூபாயாகக் காணப்படுவதுடன், ஒரு லீற்றர் டீசலின் விலையானது 139 ரூபாயாகும்.
இம்மாதத்தில் லங்கா ஐ.ஓ.சி மேற்கொள்ளும் இரண்டாவது எரிபொருள் விலை மாற்றம் இதுவாகும்.
இந்நிலையில், அரச சிலோன் பெற்றோலியம் கோப்ரேஷனானது விலைகளை அதிகரிக்கவில்லை.