கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பஸ் விபத்து!

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற சொகுசு பஸ் ஒன்று, லொறியுடன் மோதி விபத்திற்கு இலக்கானதில் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (26) அதிகாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து பயணித்த சொகுசு பஸ் கலேவல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் லொறியுடன் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.
இந்த சம்பவத்தில் பஸ்ஸில் பயணித்த 8 பேர் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.