முதல் முறையாக பதிலடி கொடுக்கப் படைகளை நிறுத்தும் நேட்டோ.
நேட்டோ தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் (Jens Stoltenberg) முதல் முறையாக உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குப் பதிலடி கொடுக்கப் படையை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறார்.
நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் காணொளிவழி நடைபெற்ற உச்சநிலை மாநாட்டிற்குப் பிறகு இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.
ரஷ்யாவின் இந்தப் படையெடுப்பு நேட்டோ உறுப்பினர் அல்லாத உக்ரேனுக்கு மட்டுமல்லாமல், ஐரோப்பாவின் மற்ற நாடுகளின் பாதுகாப்பையும் அச்சுறுத்துவதாக திரு ஸ்டோல்டன்பெர்க் (Stoltenberg) எச்சரித்தார்.
அமைப்பிடம் 100 க்கும் மேற்பட்ட அதிவிரைவு விமானங்கள் உயர் எச்சரிக்கையுடன் செயல்படவுள்ளன.
அவை 30 க்கும் மேற்பட்ட இடங்களில் இயங்குகின்றன.120 க்கும் மேற்பட்ட கப்பல்கள் வடக்கிலிருந்து மத்தியதரைக்கடல் வரை உள்ளன.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் எந்தவொரு தாக்குதலைத் தடுப்பதற்கும் எதிர்கொள்வதற்கும் தயாராய் இருப்பதாக அவர் கூறினார்.
உக்ரேனில் நடந்து கொண்டிருக்கும் போர் எந்த நேட்டோ நட்பு நாட்டிற்கும் பரவுவதைத் தடுக்கவேண்டும்; அமைதியை நிலைநாட்டுவது தங்களது நோக்கம் என அவர் தெரிவித்தார்.