தடைகளை தகர்த்து உக்ரேனிய வான்வெளியில் இணையச் சேவை வழங்கும் Starlink துணைக்கோள்
SpaceX நிறுவனத்தின் Starlink செயற்கைத் துணைக்கோள இணையச்சேவை இப்போது உக்ரேனிய வான்வெளியில் செயல்படத் தொடங்கியுள்ளது.
SpaceX நிறுவனத் தலைவர் இலோன் மஸ்க் அதனைத் தெரிவித்தார்.
இணையவசதிக்குத் தேவையான மேலும் பல உபகரணங்களை உக்ரேனுக்கு அனுப்புவதாகவும் SpaceX நிறுவனம் குறிப்பிட்டது.
உக்ரேனிய அரசாங்கத்தின் வேண்டுகோளைத் தொடர்ந்து திரு. மஸ்க் அந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
ரஷ்ய ஊடுருவலால் உக்ரேனின் இணையத் தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது.
சண்டை கடுமையாக நடைபெறும் உக்ரேனின் தெற்கு, கிழக்குப் பகுதிகளில் இணையச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
செயற்கைத் துணைக்கோளத்தின்வழி இணையச்சேவை அளிக்கும் தொழில்நுட்பத்தை முடுக்கிவிடுவது அதிகச் செலவுபிடிக்கும் செயல்.
ஆனால், தொலைத்தொடர்புக் கோபுரங்கள் இன்றி, கண்ணாடி இழைக் கம்பிவடங்கள் சென்றுசேர இயலாத தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இணையச் சேவையளிக்க அதனால் முடியும்.