யாழ். திருநெல்வேலியிலும் கையெழுத்து வேட்டை.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று யாழ்., திருநெல்வேலியில் நடைபெற்றது.
திருநெல்வேலி பொதுச் சந்தைக்கு முன்பாக காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்தக் கையெழுத்துப் போராட்டத்தில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் உள்ளிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு கையெழுத்துக்களைப் பதிவு செய்தனர்.