உலக வங்கி மற்றும் IMF வுடன் ஏப்ரலில் பேச்சுவார்த்தை…
எதிர்வரும் ஏப்ரல் மாதம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி அதிகாரிகளுடன் நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர அமர்வுகள் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் இதன் போது நிதியமைச்சர் அந்த நிறுவனங்களின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நிறுவனங்களின் அதிகாரிகளுடன் நிதி அமைச்சர் ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அவர்களின் உதவியை நாடியுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பின் பின்னர் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை நிலைநிறுத்துவதற்கான வேலைத்திட்டத்தை சர்வதேச நாணய நிதியம் வகுத்து அரசாங்கத்தை வழிநடத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.