இன்றும் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு!

இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணிநேர மின்வெட்டு அமுலாக்கப்பட உள்ளதென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி ,காலை 8.30 முதல் மாலை 5.30 வரை இந்த மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும் அவசியம் ஏற்படின், இரவு வேளையில் முன்னறிவிப்பு அற்ற 30 நிமிட மின் தடை அமுலாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.