சுவிட்ஸர்லந்தும் ரஷ்யா மீது தடைகளை விதிக்க உள்ளது
ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருக்கும் தடை உத்தரவுகளைத் தானும் பின்பற்றவிருப்பதாக சுவிட்ஸர்லந்து கூறியுள்ளது.
வழக்கமாக நடுநிலையாக இருக்கும் சுவிட்ஸர்லந்து எடுத்துள்ள பெரிய முடிவு அது என்று நாட்டின் அதிபர் கூறினார்.
ஒன்றியத்துடன் ஒருங்கிணைந்து சுவிட்சர்லந்து தடை உத்தரவுகளைப் பிறப்பிக்கவிருக்கிறது.
அவை பெரும்பாலும் சரக்கு, நிதி தொடர்பான தடை உத்தரவுகள் என்று தெரிவிக்கப்பட்டது.
தனிநபர்களின் சொத்துகளும் , நிறுவனங்களின் சொத்துகளும் முடக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது.