உக்ரைன்- ரஷ்யா போரில் யாருக்கு ஆதரவு? நிலைப்பாட்டை அறிவித்தது ஈரான்.
மத்திய கிழக்கு நாடான ஈரான், உக்ரைன்-ரஷ்யா இடையேயான போரில் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியதாவது, உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் ஆதரிக்கிறது.
ஆனால், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் கொள்கைகளில் இருந்து தான் உக்ரைன் நெருக்கடி உருவானது.
உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுதல் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான ஆட்சி கவிழ்ப்பு மூலம் அமெரிக்கா உக்ரைனை இந்நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
உக்ரைன் அமெரிக்காவின் கொள்கையால் பாதிக்கப்பட்டது. உக்ரைன் மக்கள் தெருக்களுக்கு வந்து ரஷ்யர்களுக்கு எதிராக சண்டையிடமாட்டார்கள், ஏனெனில் தற்போதைய அரசாங்கத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.
உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், பொம்மை அரசாங்கங்களுக்கு மேற்கத்திய சக்திகள் அளிக்கும் ஆதரவு வெறும் மாயை தான், அதை நம்பிவிடக்கூடாது என கமேனி தெரிவித்துள்ளார்.