சஜித்திடம் ஆலோசனை பெற்றே ஜெனிவா பறந்தனர் எம்.பிக்கள்.
ஜெனிவா செல்வதற்கு முன்னர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்து, எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை பெற்றுள்ளனர்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது. இம்மாநாட்டுக்கு இணையாக அரச சார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டில் உப மாநாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இம் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோர் நேற்று ஜெனிவா நோக்கிப் பயணமாகினர்.
சிறைத் தண்டனை அனுபவித்துவரும், ரஞ்சன் ராமநாயக்கவை விடுவித்துக்கொள்வதே இவர்களின் பயணத்தின் பிரதான நோக்கமாக உள்ளது என எதிரணி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு ஜெனிவா நோக்கி செல்வதற்கு முன்னரே, சஜித்தைச் சந்தித்து அவ்விருவரும் ஆலோசனை பெற்றுள்ளதுடன், தமது பயண நிகழ்ச்சி நிரல் பற்றியும் விவரித்துள்ளனர்.