உக்ரைனிலிருந்து 211 மாணவர்களுடன் வந்த இண்டிகோ விமானம்
போர் பதற்றம் நிறைந்த உக்ரைன் நாட்டில் படிக்கும் 211 மாணவர்களுடன் இன்டிகோ விமானம் செவ்வாய்க்கிழமை தில்லியில் தரையிறங்கியது.
இதுதொடர்பாக மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில்,
இது மிகவும் சிக்கலான நடவடிக்கைகளில் ஒன்றாகும். ஆப்ரேஷன் கங்கா அடிப்படையில் அணைத்து மாணவர்களையும் பாதிப்பிலிருந்து மீட்டு, பத்திரமாக அவர்களின் குடும்பத்துடன் மீண்டும் இணைப்பதே அரசின் நோக்கமாகும்.
பிரதமரின் அழைப்பை ஏற்றுத் தனியார் விமான நிறுவனங்களும் இந்திய விமானப் படையும் இணைந்து மாணவர்களை வரவேற்பது மிகவும் திருப்திகரமான விஷயம். ஒவ்வொரு மாணவரும் திரும்பக் கொண்டுவரப்படும் வரை இந்தப் பணி தொடரும் என்றார்.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் மத்திய அரசின் முயற்சியில், மேலும் மூன்று இந்திய விமானப்படை விமானங்கள் போலந்து, ஹங்கேரி மற்றம் ருமேனியா ஆகிய நாடுகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.