600 அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் இடைநிறுத்தம்- வெளியாகவுள்ள வர்த்தமானி.
600 அத்தியாவசியமற்ற இறக்குமதிகளை இடைநிறுத்துவதற்கான வர்த்தமானியை அரசாங்கம் இன்றிரவு (2) வெளியிடவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கையிருப்பு குறைவாக இருக்கும்போது, அவை முறையே மருந்துகள், எரிபொருள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
கோட்டேயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், அத்தியாவசியமற்றவற்றை இறக்குமதி செய்ய அனுமதித்ததன் பின்னர், இறக்குமதியை ஊக்கப்படுத்தாததன் விளைவுகளே இலங்கை தற்போது அனுபவித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டிற்கு அத்தியாவசியமற்ற 600 பொருட்களின் இறக்குமதிகளை நிறுத்தும் வர்த்தமானியை வெளியிட திறைசேரி செயலாளர் தயாராகி வருவதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
இந்த தீர்மானம் எடுப்பதில் காலதாமதம் ஆனாலும், இம்முடிவு குறித்து நாம் அனைவரும் மகிழ்ச்சியடைலாம் எனவும் அவர் தெரிவித்தார்.