ரஸ்யாவிற்கு எதிராக யுத்த குற்ற விசாரணைகள் ஆரம்பம்.
உக்ரைனில் ரஷ்ய படையினர் யுத்த குற்றங்களில் ஈடுபட்டனரா என்பது குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் இதனை தெரிவித்துள்ளார்.
யுத்தகுற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
38 நாடுகள் உக்ரைன் விவகாரத்தினை வழக்குரைஞர் அலுவலகத்திற்கு பாரப்படுத்தியுள்ளன.
கார்கிவ் நகரத்தின் மீது மீண்டும் தாக்குதலை மேற்கொண்டு பொதுமக்களை ரஸ்யா கொலை செய்துள்ளதை தொடர்ந்து உக்ரைன் ஜனாதிபதி யுத்தகுற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
சிலநாட்களிற்கு முன்னர் தலைமை வழக்கறிஞர் கரிம்கான் தான் யுத்த குற்ற விசாரணையை கூடிய விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார் எனினும் 38 நாடுகள் பாரப்படுத்தியுள்ளதை தொடர்ந்து நீதித்துறை அனுமதியில்லாமலேயே விசாரணைகளை ஆரம்பிக்ககூடிய நிலையேற்பட்டுள்ளது.