தேசிய கால்பந்தாட்ட வீரர் பியூஸ்லஸின் புகழுடல் இலங்கை வந்தடைந்தது.

கடந்த மாதம் 26 திகதி மாலைதீவில் மரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் பியூஸ்லஸ் அவர்களின் புகழுடல் இன்று (3)அதி காலையில் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்தது
தற்போது அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது உடலை பெறுவதற்காக அவருடைய துணைவியார் மற்றும் குடும்பத்தினர் நிற்கின்றார்கள்
இன்னும் சில மணித்தியாலங்களில் அவருடைய உடல் யாழ்ப்பாணத்துக்கு அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட்டு எதிர்வரும் சனிக்கிழமை மன்னார் மாவட்டத்திற்கு அஞ்சலிக்காக எடுத்து வரப்பட உள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் வரும் வழியில் பூநகரி முழங்காவில் தேவன் பட்டி போன்ற இடங்களைச் சேர்ந்த கால்பந்தாட்ட கழக வீரர்கள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பவனியாக வர உள்ளார்கள் என்றும் தெரிய வருகிறது.