ரஜினிகாந்தின் 169ஆவது திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல்.

ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையில் வெளியானது. அடுத்து புதிய படத்தில் நடிக்க பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார்.
நெல்சன் திலீப்குமார் சொன்ன கதை பிடித்ததால் அவரது இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இது அவருக்கு 169-வது படம். நெல்சன் ஏற்கனவே நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் டாக்டர் படங்களை டைரக்டு செய்துள்ளார். தற்போது விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார்.