உக்ரைனிலிருந்து திரும்பியவர்களுக்கு இலவச மருத்துவ உதவி: கேரளம்
உக்ரைனிலிருந்து திரும்பும் மாணவர்களுக்கு இலவச மருத்துவ உதவி வழங்கப்படும் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேலும் அமைச்சர் கூறியதாவது,
உக்ரைனில் 2,320 கேரள மாணவர்கள் இருப்பதாகவும், அவர்களில் சுமார் 500 பேர் தாயகம் திரும்பியுள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் சில நாட்களில் எதிர்ப்பாக்கப்படுகின்றது.
மாநிலத்தில் உள்ள நான்கு விமான நிலையங்களில் மருத்துவ நிபுணர்கள் குழு நிறுத்தப்பட்டுள்ளது . உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படுவர்களை அது சென்றடையும்.
போர் பதற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவைப்படும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும், இதற்காக அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் ஒரு சிறப்புக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. உக்ரைனிலிருந்து வருபவர்கள் அங்குத் தொடர்புகொண்டு தீர்வு பெறலாம் என்று ஜார்ஜ் கூறினார்.