உக்ரேனின் கர்ஸன் நகரம் ரஷ்ய இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது

ரஷ்ய துருப்புக்கள் , உக்ரேனின் முக்கிய நகரமான Kherson ரஷ்ய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அங்குள் மேயர் தெரிவித்துள்ளார்.
யுக்ரேனின் முக்கிய நகரங்களில் ஒன்றாக என கர்சன் கருதப்படுகிறது.
கர்சன் நகரில் 2,90,000 பேர் வாழ்கின்றனர். நகரம் ரஷ்ய இராணுவத்திற்கு பிடிபட்டது என்றும், நகரவாசிகள் வீடுகளுக்குள் இருக்குமாறும் நகர அதிபர் இஹோர் கோலிக்காய்வ் அவரது முகப்புத்தக வாயிலாக கூறியுள்ளார்.
மக்களுக்கு எதுவித தீங்கும் செய்ய வேண்டாம் என கர்சோன் நகர அதிபர் , ரஷ்ய இராணுவத்திடம் கோரியுள்ளார்.