தொடரும் ஷெல் தாக்குதல். நெருப்பை அணைக்க, நெருங்க முடியாமல் திணறும் தீயணைப்பு வீரர்கள்.

சர்வதேச அணுசக்தி அமைப்பு (IAEA) ஸபோரிஷியா அணுமின் நிலையத்தில் ஷெல் தாக்குதல்கள் நடப்பது பற்றிய செய்திகள் தொடர்பாக யுக்ரேனிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டிருப்பதாகக் கூறியுள்ளது.
அணுமின் நிலையத்தின் செய்தித் தொடர்பாளர், ரஷ்ய படைகள், “கடுமையான தாக்குதலை நிறுத்த வேண்டும்,” என்று சமூக ஊடகங்களில் கேட்டுக் கொண்டார்.
“ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி நிலையத்தில், அணு ஆற்றல் அபாயத்தின் உண்மையான அச்சுறுத்தல் உள்ளது,” என்று ஆண்ட்ரி டூஸ் டெலிக்ராமில் ஒரு காணொளியில் கூறினார் என்கிறது அசோசியேட்டட் பிரஸ் செய்தி முகமை.