உக்ரைனில் இந்திய மாணவர் காயம்: அமைச்சர் தகவல்

உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் இந்திய மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா 9-வது நாளாக இன்று தாக்குதல் நடத்தி வருகிறது. கெர்சன் நகரை முழுமையாகக் கைப்பற்றியுள்ள ரஷியப் படை, இன்று உக்ரைனில் உள்ள சபரோஸ்ஸியா அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது.
இதனிடையே, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு முழு முயற்சியில் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தலைநகர் கீவ் பகுதியில் இந்திய மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளதாக மத்திய இணையமைச்சர் அமைச்சர் வி.கே.சிங் தகவல் தெரிவித்துள்ளார்.
கீவில் இருந்து வெளியேறிய இந்திய மாணவர் சுடப்பட்டதால் அவர் பாதியிலேயே திரும்ப அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறைந்தபட்ச இழப்புடன் அதிகமான இந்தியர்களை வெளியேற்ற நாங்கள் முயற்சிக்கிறோம் என்றும் கூறினார்.