அமெரிக்காவில் இரவு கேளிக்கை விருந்து நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

அமெரிக்காவின் நிவேடா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு கேளிக்கை விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியது யார்? எத்தனை பேர் இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலை நடத்தினர்? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
ஆனால், இந்த துப்பாக்கிச்சூட்டில் கேளிக்கை விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு நபர் உயிரிழந்தார். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த தாக்குதலை நடத்தியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.