2022ஆம் ஆண்டுக்கான பாராலிம்பிக் குளிர்கால போட்டிகள் ஆரம்பம் …

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் 2022ஆம் ஆண்டுக்கான பாராலிம்பிக் குளிர்கால போட்டிகள் தொடங்கியுள்ளன.
இதன்படி ,பெய்ஜிங்கில் உள்ள தேசிய மைதானத்தில் இதற்கான வண்ணமய விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி தலைவர் Andrew Parsons உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதிபர் Xi Jinping அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
மேலும் ,தொடக்க விழாவை முன்னிட்டு பார்ப்பவர் கண்ணைக் கவரும் வகையில் வாணவேடிக்கைகள் நடைபெற்றன.
அதற்கமைய ,முன்னதாக போட்டியில் பங்கேற்க வந்த உக்ரைன் வீரர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. 564 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த போட்டி 13ம் திகதி வரை நடைபெறுகிறது.