மாத்தளை நகரிலும் கையெழுத்து வேட்டை!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை இன்று மாத்தளையிலும் முன்னெடுக்கப்பட்டது.
மாத்தளை முத்துமாரியம்மன் கோயிலுக்கு முன்னால் கண்டி பஸ் நிலையத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதில் மக்கள் பலரும் கலந்துகொண்டு தத்தமது கையெழுத்துக்களைப் பதிவிட்டனர்.