தீர்மானம் எடுக்கும்போது ஒரு கணம் சிந்தியுங்கள்!
“அவசரப்பட்டு முடிவுகளை எடுக்கக்கூடாது. முடிவு எடுக்கும்போது ஒரு கணமாவது சிந்திக்க வேண்டும். விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சரவையிலிருந்து நீக்கிய விடயத்தில் இந்தத் தவறு இழைக்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கான விசேட கூட்டம் இன்று கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அமைச்சர்களை மாற்றுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அவர் என்னையும் நீக்கலாம். அந்த அதிகாரத்தைச் சவாலுக்கு உட்படுத்தமுடியாது.
எனினும், அமைச்சுப் பதவியிலிருந்து நபர்களை நீக்குவதால் நாட்டில் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருக்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம்.
11 பங்காளிக் கட்சிகளும் தொடர்ந்து இணைந்து செயற்படும்” – என்றார்.