சீனாவும் ஶ்ரீலங்காவை கைவிட்டது!
ஸ்ரீ லங்காவுக்கு மீண்டும் கடன் அல்லது பண உதவிகளை வழங்குவதில்லை என சீனா உள்ளிட்ட 5 நாடுகள் முடிவு எடுத்துள்ளதாக அறிய முடிகிறது.
தற்போது ஶ்ரீலங்காவுக்கு வருகை தந்துள்ள ராஜதந்திர குழுவினர் இத் தகவலை அறிவித்துள்ளனர்.
சீனா, கடன் வழங்குவதை நிறுத்துவதற்கு காரணமாகியுள்ள இரண்டு அடிப்படை பிரச்சனைகளான , மத்திய அதிவேக வீதியின் 3வது பணி தொடர்பான பிரச்சனை ஒரு முக்கியக் கருவாகக் கொண்டுள்ளதோடு, சீனாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, திரும்பியனுப்பப்பட்ட உரக் கப்பல் விடயம் ஆகியன மிக முக்கியமான விரிசலுக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
இதுவரை சீனா , ஸ்ரீ லங்காவுக்கு 16பில்லியன் டாலர்களை நிதியுதவியாக அளித்துள்ள போதிலும் , அவற்றை பயன்படுத்தி எந்த ஒரு மேம்பாட்டுத் திட்டத்தையும் ஶ்ரீலங்கா செயல்படுத்தவில்லை எனவும் , அந்த பணத்தை பெற்று, ஏற்கனவே பெற்ற கடன்களை அடைக்க ஶ்ரீலங்கா அவற்றை பயன்படுத்தியுள்ளது என அவர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.