உக்ரேனிய “ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகள்” ரஷ்ய இராணுவத் தலைவர்களை குறி வைக்கிறார்கள்
உக்ரேனிய ஸ்னைப்பர் துப்பாக்கிதாரி ஒருவரால் ரஷ்ய முன்னணி ராணுவ ஜெனரல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு உளவுத்துறை அண்மையில் தெரிவித்திருந்தது.
வெளிநாட்டு உளவுத்துறை அறிக்கைகளின்படி, கடந்த வாரம் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கிய பின்னர் போர்க்களத்தில் ரஷ்யர்களிடம் இழந்த ஒரு முன்னணி இராணுவ அதிகாரி , ரஷ்ய ராணுவத்தில் மேஜர் ஜெனரல் ஆண்ட்ரே சுகோவ்ஸ்கி (47) என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இரண்டு ரஷ்ய இராணுவத் தளபதிகள் உக்ரேனிய துப்பாக்கி சுடும் வீரர்களால் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல ரஷ்ய இராணுவ பிரிவின் தளபதி ஒருவர் மற்றும் படைப்பிரிவின் தளபதி ஒருவரும் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான ரஷ்யாவின் திட்டங்கள் சரியாக வேலை செய்யவில்லை என மேற்கத்திய உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன, இதனால் மூத்த இராணுவ தளபதிகள் முன் வரிசைக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது எனவும், அங்கு அவர்கள் உக்ரேனிய ஸ்னைப்பர்தாரிகளால் எளிதாக இலக்காகியுள்ளனர் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.