பிரபல இசையமைப்பாளர் டி.இமானுக்கு விரைவில் இரண்டாவது திருமணம். வெளியான தகவல்.!

தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளர்களின் ஒருவர் டி.இமான். இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் இசையமைத்துள்ளார். டி இமான் தெலுங்கில் வெளியான தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இசையமைத்த “கும்கி” திரைப்படத்திற்குப் பின் ரசிகர்களிடையே தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார்.
டி.இமான் மோனிகா ரிச்சர்ட் இருவரும் 2008ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
சமீபத்தில் தனது மனைவியை சட்டரீதியாக விவாகரத்து பெற்றுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். சென்னையை சேர்ந்த உமா என்ற பெண்ணை வரும் மே மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமண என கூறப்படுகிறது. விரைவில் திருமணத்தை பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.