ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டி அட்டவணை.

ஐபிஎல் 15ஆவது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் களமிறங்குவதால் 10 அணிகள் இந்த சீசனில் களமிறங்குகின்றன.

10 அணிகள் ஆடவுள்ளதால் இந்த சீசனில் 10 அணிகளும் தலா 5 அணிகள் அடங்கிய இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

அதன்படி, குரூப் ஏ-வில் மும்பை இந்தியன்ஸ், கேகேஆர், டெல்லி கேபிடள்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய 5 அணிகளும், குரூப் பி-யில் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 5 அணிகளும் இடம்பெற்றுள்ளன.

ஒரு பிரிவில் இருக்கும் ஒவ்வொரு அணியும் மற்ற 4 அணிகளுடன் தலா 2 முறையும், மற்றொரு பிரிவில் இருக்கும் 4 அணிகளுடன் ஒருமுறையும், ஒரேயொரு அணியுடன் மட்டும் 2 முறையும் மோதும் வகையில் போட்டி அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான முழு போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. வரும் 26ஆம் தேதி தொடங்கி 70 லீக் போட்டிகள் 65 நாட்களுக்கு நடக்கின்றன. வரும் 26ஆம் தேதி ஐபிஎல் 15ஆவது சீசன் தொடங்கவுள்ள நிலையில் அன்றைய தினம் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதுகின்றன.

CSK’S Matches In IPL 2022!
.
.#Cricket #IPL #IPL2022 #KKRvCSK #CSKvKKR pic.twitter.com/av7M1wu2J8
— CRICKETNMORE (@cricketnmore) March 6, 2022

சிஎஸ்கே அணியின் போட்டி விவரங்கள்:

மார்ச் 26: சிஎஸ்கே – கேகேஆர்

மார்ச் 31: சிஎஸ்கே – லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

ஏப்ரல் 3: சிஎஸ்கே – பஞ்சாப் கிங்ஸ்

ஏப்ரல் 9: சிஎஸ்கே – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஏப்ரல் 12: சிஎஸ்கே – ஆர்சிபி

ஏப்ரல் 17: சிஎஸ்கே – குஜராத் டைட்டன்ஸ்

ஏப்ரல் 21: சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ்

ஏப்ரல் 25: சிஎஸ்கே – பஞ்சாப் கிங்ஸ்

மே 1: சிஎஸ்கே – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

மே 4: சிஎஸ்கே – ஆர்சிபி

மே 8: சிஎஸ்கே – டெல்லி கேபிடள்ஸ்

மே 12: சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ்

மே 15: சிஎஸ்கே – குஜராத் டைட்டன்ஸ்

மே 20: சிஎஸ்கே – ராஜஸ்தான் ராயல்ஸ்

Leave A Reply

Your email address will not be published.