அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர் மரணம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

தற்போது இளையோர்கள் மத்தியில் பிரபல்யமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு விடையம் தான் லிக்குவிட் டயட். அதாவது நீர் ஆகாரம் மட்டும் உண்டு, உடல் எடையை திடீரென குறைப்பது.
அதுவும் 2 வாரங்களில் அல்லது 3 வாரங்களில் 3 கிலோவை குறைக்க , முற்படுகிறார்கள். இதனால் பெரும் விபரீதங்கள் உண்டாகும் என்று மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் இளைய தலைமுறையினர் இதனைக் கேட்டபாடாக இல்லை.
சில தினங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர், ஷேன் வோன் வெறும் 52 வயதில் மாரடைப்பால் இறந்து போனார் என்ற செய்தி பலரை உலுக்கிய சம்பவம். அவர் இறக்கும் போது அருகில் இருந்த நண்பர்கள், அவருக்கு முதல் உதவி கொடுத்து அவரை எவ்வளவோ காப்பாற்ற முனைந்தார்கள். இதில் சிலர் முதல் உதவியில் தேர்ச்சி பெற்றவர்கள்.
ஆனால் அவர்களாலும் சரிஅங்கே விரைந்து வந்த மருத்துவர்களாலும் சரி ஷேன் வோனை காப்பாற்ற முடியவில்லை. அவரது பிரேதப் பரிசோதனை முடிவடைந்து அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
மாரடைப்பு காரணமாக அவர் இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள வேளை. அவருக்கு கொலஸ்ரோல் இல்லை என்பது மேலும் அதிர்ச்சியான விடையம்.
அவர் தாய்லாந்தில் தங்கியிருந்த 14 நா ட் களி ல் , நீர் ஆகாரத்தை உ ண் டு வந்தார். உணவை உட்கொள்ளவில்லை. சரியாக சாப்பிட வில்லை. இதனூடாக தனது எடையை கணிசமான அளவு குறைக்க ஷேன் வோன் முயற்ச்சி எடுத்துள்ளார்.
இதுவே அவருக்கு யமனாக வந்து விட்டது. கடும் உடல் பயிற்ச்சி, சரியான உணவு இன்மை மற்றும் நீர் ஆகாரம் மட்டுமே எடுத்துக் கொண்டதன் விளைவாகவே அவருக்கு திடீர், மாரடைப்பு ஏற்பட்டு, இருக்கக் கூடும் என்று தாய்லாந்து மருத்துவர்கள் கருதுகிறார்கள்.