முதல் டெஸ்ட் : பாகிஸ்தான் – ஆஸ்திரேலிய அணிகள் மோதிய ஆட்டம் ‘டிரா’.
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 476 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 4 -வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 449 ரன்கள் குவித்தது. கடைசி நாளான இன்று தொடர்ந்து விளையாடினர். கடைசிநாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 140.1 ஓவர்களில் 459 ரன்கள் எடுத்தது .
பாகிஸ்தான் தரப்பில் நவ்மான் அலி அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் 17 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடியது. அதிரடியாக விளையாடிய பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 252 ரன்கள் எடுத்திருந்த போது 5வது நாள் ஆட்ட நேர முடிவால் ,இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.