எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி.

மின் உற்பத்திக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர், இதனைக் குறிப்பிட்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றிருந்தது. எனினும் இதில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கலந்து கொண்டிருக்கவில்லை. அவர் இதற்கு முன்னர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, தாம் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார். விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில் ஆகியோர் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர் நேற்று முதலாவது அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றுள்ளது.