நள்ளிரவில் நடந்த விபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மூச்சுத்திணறி பலி.

கேரளாவில் நடந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
கேரளாவின் வர்க்கலாவை சேர்ந்தவர் பிரதாபன், இவரது மனைவி ஷெர்லி, இவர்களுக்கு நிகில் மற்றும் அகில் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
நிகிலுக்கு திருமணமாகி அபிராமி என்ற மனைவியும், 8 மாதங்களே ஆன ஆண் குழந்தையும் இருக்கிறது.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வேளை, உள்ளூர்நேரப்படி நள்ளிரவில் சுமார் 1.15 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் அதிகாலை 2 மணியளவில் அங்கு சென்று தீயை அணைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் அதிகாலை 2 மணியளவில் அங்கு சென்று தீயை அணைத்தனர்.