ஷேன் வோன் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு சந்தித்த பெண்கள் யார்? (புகைப்படங்கள்)
ஆஸ்ட்ரேலிய சூப்பர் கிரிக்கட் வீரரான ஷேன்வோன் அவருடைய அறையில் இறப்பதற்கு முன் , ஷேன்வோன் தங்கியிருந்து சுகபோக விடுதியில் மசாஜ் செய்யும் 4 (பாலியல் பெண் தொழிலாளிகள்) பெண்கள் தங்கியிருந்துள்ளமை தெரிய வந்துள்ளதாக பிரதேச போலீசார் தெரிவிக்கின்றனர்.
CCTV கேமரா காட்சிகளில் இளம் பெண்கள் நான்கு பேர் அங்கு செல்வதை காணக் கூடியதாக உள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவித்து உள்ளன.
இந்த இளம்பெண்கள் நான்கு பேரும் , சம்பந்தப்பட்ட விடுமுறை விடுதிக்கு ஷேன்வோன் இறப்பதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னர் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. அவர்கள் வெள்ளிக்கிழமை 1.53 மணி அளவில் விடுமுறை விடுதிக்கு வரும் காட்சிகள் CCTV மூலம் காண முடிகிறது.
தாய்லாந்தின் கோஹ் சம்யுய் தீவில் உள்ள விடுமுறை விடுதியில் ஷென் வான் மற்றும் அவரது நண்பர்கள் மூவர் இணைந்து தங்கியிருந்த போது, இந்த நான்கு பெண்களும் வந்துள்ளதோடு , ஷென் வானோடு 2 பெண்கள் தங்கியிருந்துள்ளனர்.
போலீஸ் தகவல்களின் வழியாக மேற்குறிப்பிட்ட பெண்கள் நால்வரும் பி.ப. 2.58க்கு அங்கிருந்து வெளியேறிச் செல்வது CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. ஷென் வோனுடன் இருந்த 2 பெண்களை தவிர்த்து , ஏனைய இருவரும் ஷென் வோனின் நண்பர்களோடு இருந்துள்ளனர்.
ஷென் வோன் அவர்களின் நண்பர்கள் இருவரும் அவருடைய நடமாட்டம் இல்லாமையால் பி.ப. 5.15 மணிக்கு அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது அவர் இறந்துள்ளதை கண்ணுற்றுள்ளார்கள்.
வோன் அறைக்கு வந்த இரு பெண்களுமே , அவர் உயிருடன் இருக்கையில் கடைசி நேரத்தில் சந்தித்த நபர்கள் என நம்பப்படுகிறது.
வோனின் படுக்கைக்கு அருகில் உள்ள நிலத்தின் இரண்டு இடங்களிலும் , மூன்று துவாய்களிலும், ஒரு தலையணையிலும் இரத்தக் கறைகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தவிர ஒரு துவாயில் அவரது வாந்தியும் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஷென் வோன் இருந்த இடத்திற்கு வந்து சென்ற பெண்மணிகள் நான்கு பேர்களும் இதுவரை அடையாளம் காணப்பட்டார்களா என்பது பற்றிய போலீஸ் தகவல்கள் எதையும் இதுவரை போலீசார் வெளியிடவில்லை.
எனினும் ஷென் வோன் மரணித்த பின் நடத்திய , மரண பரிசோதனை அறிக்கையின்படி அவரது மரணம் இயற்கை மரணம் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.